india

img

அரிட்டாபட்டியிலிருந்து வேதாந்தா நிறுவனத்தை விரட்டியடிப்போம்! 24 கிராமங்களிலும் பேரெழுச்சி

மதுரை,டிச.22-  பல்லுயிர் சூழல் மண்டல மான அரிட்டாபட்டி மற்றும் பல்வேறு கிராமங்களை டங்ஸ்டன் சுரங்க திட்டத்துடன் அழிக்கும் முயற்சியை மேற்கொள்ளவுள்ள வேதாந்தா நிறுவனத்தை விரட்டி யடிப்போம் என்று முழக்கமிட்டு, கடந்த 3 நாட்களாக 24 கிராமங் களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய நடை பயணம் டிசம்பர் 22 அன்று உற்சாக மாக நிறைவடைந்தது.

வேதாந்தா நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதிக்க கிராமங்களை அழிக்கும் திட்டத் திற்கு அனுமதித்துள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து  செய்யக்கோரியும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் டிசம்பர் 20 அன்று துவங்கி, அரிட்டாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது.

வாலிபர் சங்க நடைபயணத் திற்கு பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு,  உற்சாக வரவேற்பளித்து, ஆதரவளித்தனர். 

வில் இருந்து நடைபயணத்தை  தெற்கு தெரு ஊராட்சி தலைவர் சி.வாசுகி  சக்கரவர்த்தி. காங்கிரஸ் தலைவர்- சுதந்திரப் போராட்ட தியாகி பரமசிவம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  தெற்குத்தெருவில் துவங்கி, விநாயகபுரம், கல்லம்பட்டி, சூரக்குண்டு, மேலூர், மேலூர் செக்கடி, சந்தப்பேட்டை, ஆகிய பகுதிகளுக்குச் சென்று மேலூர் பேருந்து நிலையத்தில் நிறை வடைந்தது.

முடிவில் மேலூர் பேருந்து   நிலையம் முன்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. நடைபயண நிகழவில் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன், மாநிலக் குழு உறுப்பினர் சுரேஷ் ,முகேஷ், மாநிலத் துணைத் தலைவர் பாலாஜி, சிவகங்கை மாவட்டத் தலைவர் கௌதம், மது ரை புறநகர் மாவட்டத் தலைவர் வி.கருப்பசாமி, மாவட்டச் செய லாளர் பி.தமிழரசன், மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலகிருஷ் ணன், மாநகர் மாவட்ட தலைவர் பாவல் சிந்தன், மாவட்டச் செயலா ளர் செல்வா, மாவட்டப் பொரு ளாளர் வேல்தேவா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், திண்டுக்கல். விருதுநகர், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், மாணவர் சங்க  மாவட்டச் செயலாளர் கா.பிருந்தா, மாதர் சங்க மத்தியக்குழு உறுப் பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.கண்ணன், முன் னாள் தாலுகா தலைவர் எஸ்.பி. மணவாளன் ஆகியோர் பங்கேற்றனர்.   

கிராமமக்கள் வரவேற்பு

கல்லம்பட்டி கிராம மக்கள் சார்பாக கரவொலி எழுப்பி உற் சாகமாக  வரவேற்பு அளித்தனர். உங்களுடன் என்றும் துணை நிற்போம் என்று மக்கள் உறுதி  அளித்தனர்.

வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  கல்லம்பட்டி கிராம மந்தையில் தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் என்.பழனிச்சாமி, மற்றும் ஊர் மக்கள் வாழ்த்திப் பேசினர்.  

வாலிபர் சங்க நடைபயணக் குழுவினரை மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக  மாவட்டத் தலை வர் முபாரக் அலி சூரக்குண்டு கிராமத்தில் வாழ்த்திப் பேசினார். சூரக்குண்டு கிராமத்தில் ஊராட்சி சார்பிலும் கிராம மக்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாலிபர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர்கள் எஸ்.கண்ணன், எஸ்.பாலா,  எல்ஐசி ஊழியர் சங்க நிர்வாகி ரமேஷ் கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் கள் இரா.லெனின், வை.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டக் குழு சார்பில்  மேலூர் வெளியூர் பேருந்து நிலையம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.  

சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அர விந்தன் வரவேற்று பேசினார்.  சிஐடியு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் மேலுர் நகைக்கடை வீதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக வளத்தை பாதுகாக்கப் போராடும்  இளைஞர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: அரிட்டாபட்டியை பாதுகாக்கவும், அங்கு டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை ரத்து செய்யக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளைஞர்கள் நடைபயணம் நடத்தி வருகிறார்கள். இந்த பயணம் செல்லும் இடமெல்லாம் மக்களின் ஆதரவையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. வேதாந்தாவின் கனிமவளச் சுரண்டலை மதுரை மண்ணில் அனுமதிக்க‌ மாட்டோம் என்ற‌ உறுதி மென்மேலும் வலுப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் திரண்டு நின்று, உரைகளை ஊன்றி கவனித்து ஆதரிக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளத்தையும், வளர்ச்சியையும் பாதுகாத்து முன்னெடுக்கும் இந்தப் பயணத்திற்காக வாலிபர் சங்க  இளைஞர்களை பாராட்டி வாழ்த்துகிறோம்.