தேர்தல் ஆணையம் இவிஎம் ஆவணங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை பொது ஆய்வுக்கு உட்படுத்துவதைத் தடுக்க விதிகளில் திருத்தம் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் எதை மறைக்க முயற்சிக்கிறது?
சிபிஎம்மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்
தேர்தல் ஆணையமும், மத்தியில் அதன் முதலாளிகளும் அமர்ந்திருப்பதால்தான் மகாராஷ்டிராவில் உருவாகியுள்ள அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. மக்களின் வாக்குகளைத் திருடி இந்த அரசு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது எந்த தகவலையும் தெரிவிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது என்பது மோசடியை உறுதிபடுத்துகிறது.
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே
பல சிசிடிவி கேமராக்கள், 10க்கும் மேற்பட்ட கோடி மீடியாக்கள் உள்ள நாடாளுமன்றத்தில் ஏதாவது சம்பவம் நடந்தால் உடனே வைரலாக்கும் “கோடி மீடியா” ராகுல் தான் பாஜக எம்.பி.,யை தள்ளிவிட்டார் என உறுதிப்படுத்த ஒரு வீடியோவை கூட இதுவரை வெளியிடவில்லையே ஏன்?
மூத்த பத்திரிகையாளர் ரவீஷ் குமார்
கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அனுமதித்த ஆவணத்தை அமலாக்கத்துறை முதலில் வெளியிட வேண்டும். மக்களை தவறாக வழிநடத்த பாஜக சதி செய்கிறது. மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம்.
தில்லி முதல்வர் அதிஷி
பாஜக கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சி சேரப் போவதாக வெளியான செய்தியை அக்கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி ஆதாரமற்றது என்று அக்கட்சி கூறியுள்ளது.
பிரதமர் மோடிக்கு, குவைத் நாட்டின் உய ரிய “தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்” விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
ராய்பூர்
சத்தீஸ்கரில் துயரம்சரக்கு வாகனம் கவிழ்ந்து 5 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு வாக னம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
பஸ்தர் மாவட்டம் ஜகதால்பூர் அருகே சந்தமேதா கிராமத்தில் 45 பேரை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்த தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த 30 பேர் பஸ்தர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.