எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய நாடாளுமன்ற விவகார மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தாக்கல் செய்தார்.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்தது. இது வக்பு சொத்துக்களைச் சூறையாடுவதற்கான சதித் திட்டம் என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னணியில், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழுவில் ஆய்வு நடத்தப்பட்டு, பின்னர் பா.ஜ.க கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் அளித்த 14 திருத்தங்களை மட்டுமே பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவால் ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் முன்வைத்த 44 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய நாடாளுமன்ற விவகார மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தாக்கல் செய்தார். அப்போது, எதிர்கட்சிகள் எம்.பி-க்கள் தொடர்ந்து மக்களவையில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.