ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அதி காரப் பதவியில் இருப்பவர்க ளுக்கான பிரச்சாரக் கருவியாக வும், இணையதளங்களில் இருந்து போலி செய்திகளை எடுத்து விநியோ கிக்கிறது எனவும் விக்கிபீடியா தனது வலைதள பக்கத்தில் குறிப் பிட்டு இருந்தது. இதனை எதிர்த்து விக்கிபீடியாவுக்கு எதிராக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தில்லி உயர்நீதிமன் றத்தில் அவதூறு வழக்கும் தொடர்ந்தது.
இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறு வனத்துக்கு ஆதரவாக விக்கிபீடியா வுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீஸில், “விக்கி பீடியா வெளியிடும் தகவல்கள் தொடர் பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. விக்கிபீடியாவின் பக்கங்களை உரு வாக்குவதிலும், திருத்தம் செய்வதிலும் ஒரு சிறிய குழு ஈடுபட்டு வருவதாக ஒரு பார்வை இருக்கிறது. விக்கிபீடியாவை இடைத்தரகராக கருதாமல், ஒரு வெளி யீட்டாளராக ஏன் கருதக்கூடாது” என அதில் கூறப்பட்டுள்ளது.