யுஜிசி வரைவு விதிமுறைகள் 2025 குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கி, மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட யுஜிசி வரைவு விதிமுறைகள் 2025-க்கு கல்வியாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை அடுத்து, யுஜிசி வரைவு விதிமுறைகள் 2025 குறித்து கருத்து தெரிவிப்பதற்கான பிப்ரவரி 5-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள், draft-regulations@ugc.gov.in எனும் மின்னஞ்சல் முகவரியில் கருத்துகளை சமர்ப்பிக்கலாம்.