தில்லியில் ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மஞ்ச் மற்றும் ஆதிவாசி ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பழங்குடி பிரநிதிகள் கலந்துகொண்டனர். ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில செயலாளருமான ஜிதேந்திர சவுத்ரி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் புலின் பாஸ்கே ஆகியோர் தொடக்க அமர்வில் உரையாற்றினர். பேராசிரியர் விகாஸ் ராவல் அறிக்கை சமர்ப்பித்தார்.