india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் பாம்புக்கடி பாதிப்பு மற்றும் அத னால் ஏற்படும் இறப்பை அரசுக்கு தெரிவிக் கக்கூடிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களுக்கு ஒன்றிய அரசு அவசர கடிதம் எழுதி  அனுப்பி வைத்துள்ளது. 

ஆந்திர மாநில வக்பு வாரியத்தை கலைத்து,  அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள் ளது. வக்பு வாரிய தலைவர் தேர்வில் நிச்சயமற்ற நிலை நிலவியதாலும், நீண்ட நாட்களாக வாரி யம் செயல்படாமல் இருந்ததாலும் வக்பு வாரியம்  கலைக்கப்பட்டது என ஆந்திர அரசு விளக்கம் அளித்துள்ளது. 

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் பி.குரப்பா நாயுடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தெலுங்கானா மாநிலம் முலுகுவில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். 

மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கு மற்றும்  இம்பால் கிழக்கு மாவட்டங்களில் போலீசார்  நடத்திய தேடுதல் வேட்டையின் போது, தடை  செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது  செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி கள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயு தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீ சார் தெரிவித்துள்ளனர்.

“இந்திய பொருளாதாரத்தின் பலன்கள் ஒரு  சில கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது’’ என மக்களவை எதிர்க்கட்சி தலை வர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

“பாஜகவின் தேவேந்திர பட்னவிஸுக்கு முதல்வர் பதவி அளித்தால், எனக்கு  நிதி, வருவாய், உள்துறை இலாக்கா கட்டாயம்  ஒதுக்க வேண்டும்” என சிவசேனா தலைவர் ஏக் நாத் ஷிண்டே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் நடந்த சில வன்முறை வழக்கு கள், குண்டு வெடிப்பு வழக்குகள், உச்சநீதி மன்ற உத்தரவின்படி, அசாமின் கவுகாத்தியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மசூதியில் சட்டவிரோத கட்டுமானங்கள் உள்ளன என  நீதிமன்றத்தில் இந்திய தொல்லியல்துறை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா அனல்மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படு வதாகக் கூறப்படும் விவகாரத்தில் மத்திய சுற்  றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்ச கம் விளக்கம் அளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.