india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்தியாவில் “ஐபோன் 16 சீரிஸ்” போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில் தில்லி, மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் அதி காலை முதலே கூட்டம் அலைமோதியது. “ஐபோன் 16 சீரிஸ்” போன்களுக்கு ரூ.79,900 முதல் ரூ.1,19,900  வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்ப தாக புகார் எழுந்த நிலையில், கர்நாடக அற நிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களுக்கு “நந்தினி நெய்யை” பயன்படுத்த வேண்டும் என அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. 

கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தும் பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யாமல் இருப்பது ஏன்? என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

“எனக்கு சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை; மோடி பிரதமராக இருக்கும் வரை அவருடன்  இருப்பேன்” என்று ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.

“திருப்பதி லட்டு தரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு கூறியது உண்மைதான்” என  திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியா மளா ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். 

திருப்பதி கோவிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய் யில் எந்த குறைபாடும் இல்லை என தமிழ்நாட் டின் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் (திண்டுக்கல்) தெரி வித்துள்ளது. 

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலப்பு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா அறிக்கை கோரினார். மேலும் திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அவர் கூறினார்.

கொல்கத்தா
பயிற்சி மருத்துவ மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் முது நிலை மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற எச்சரிக்கையை மீறியும் 42 நாட்களாக பயிற்சி மருத்துவ மாணவர்கள் தொடர்  போராட்டம் நடத்தி வந்த நிலையில், மருத்துவ மாணவர்களின் கோரிக்கை களை (உயரதிகாரிகள் இடமாற்றம்) மேற்கு வங்க அரசு ஏற்பதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவ மாணவர்கள் சனியன்று முதல் பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர்.

கோழிக்கொடு
மலப்புரத்தில் மேலும் 7 பேருக்கு நிபா அறிகுறி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத் தில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் பரவத் துவங்கியுள்ளது. கடந்த வாரம் திரு வாலி பகுதியைச் சேர்ந்த 24 வயதான கல்லூரி மாணவர் நிபா வைரஸ் தாக்கு தலுக்கு பலியானார்.

இதனையடுத்து மலப்புரம் மாவட்டத்தை கட்டுப்பாட்டுப் பகுதியாக கேரள மாநில சுகாதாரத்துறை அறி வித்துள்ளது. நிபா வைரஸால் உயிரிழந்த கல்லூரி மாணவருடன் நேரடித் தொட ர்பில் இருந்த 150க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் 7 பேருக்கு நிபா அறிகுறி இருப் பது தெரியவந்துள்ளது என கேரள சுகா தாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “வியாழ னன்று பரிசோதனை செய்யப்பட்ட 37 பேரின் முடிவுகளில் நோய் தொற்று இல்லை (நெகட்டிவ்) என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதே போல நிபாவால் உயிரிழந்த இளைஞரின் தாய் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உள்ளிட்ட நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் மாதிரி களின் பரிசோதனை முடிவுகள் எதிர்மறை யாக (நெகடிவாக) உள்ளன. இதன் மூலம், மொத்தம் 63 பேருக்கு எதிர்மறை (நெகடிவ்) என்று வந்துள்ளது” என அமைச் சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மும்பை
ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு ரத்து மும்பை உயர்நீதிமன்றம் குட்டு

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021, சட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு ஜனவரியில் திருத்தம் கொண்டுவந்தது. அதில் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிஐபி (Press Information Bureau (PIB) கீழ், உண்மை சரிபார்ப்புக் குழு (FCU) போலி என்று கூறும் செய்தி கள், பதிவுகளை அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் தங்களின் பக்கங்களி லிருந்து நீக்க வேண்டும். அவை நீக்கப் படாவிட்டால், சட்ட ரீதியாக நடவடிக்கை  எடுக்கப்படும் என சட்டதிருத்தத்தில் கூறப் பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் திட்டங்கள் தொடர்பாகப் பகிரப்படும் போலி செய்திகளைக் கண்டறியவே இது கொண்டுவரப்பட்டிருக்கிறது என பாஜக அரசு கூறியது. இருப்பினும் எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எவை போலி, எவை போலியில்லை என்பதற்கான தெளிவான வரையறை அதில் இல்லை என ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவின் திட்டத்திற்கு கண்டனங்கள்குவிந்தன.

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் குணால் கமீரா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசின் உண்மை சரி பார்ப்புக் குழுவை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் அரசியலமைப்பை மீறும் வகையில் சட்டத்திருத்தம் இருப்பதால்,  தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த திருத்தத்தை யும் ரத்து செய்து மும்பை உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.