கூடுதல் காலால் வரி விதிப்பு காரணமாக சிகரெட்டின் விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புகையிலைப் பொருட்கள் மீது கூடுதல் காலால் வரி விதிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த சட்டத்திருத்தத்தின் படி, தற்போது ரூ.18 ஆக உள்ள ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆக உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
