headlines

img

நச்சு அரசியல் ஊடுருவல்!

நச்சு அரசியல் ஊடுருவல்!

அசாம் மக்களை அச்சுறுத்தும் வங்கதேச ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியாகக் கருதுகிறது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்களன்று போர்துவா நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

தேர்தல் வந்துவிட்டாலே வெறி கொண்டு வெறுப்பைக் கக்குகிறார்கள். குஜராத்தில் துவக்கிய அந்த வெறியாட்டத்தை வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமாக நிகழ்த்துகி றார்கள். அதன் அண்மைக்கால வடிவமாக உள்ளது வங்கதேச ஊடுருவல்காரர்கள் என்ற பிரச்சாரம். அதை அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019 மூலம் அமல்படுத்தி இஸ்லாமியர் கள் மட்டுமின்றி இலங்கைத் தமிழர்கள் உள்பட பலரும் பாதிக்கப்படும் நிலையை மாநில பாஜக அரசு உருவாக்கிவிட்டது. ஆனாலும் வங்கதேச ஊடுருவல்காரர்களால் அசாம் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்று இன்னும் அமித் ஷா கூறுவது அவரது இந்துத்துவா சித்தாந்தத்தின் இஸ்லாமிய வெறுப்புணர்வையே வெளிப்படுத்துகிறது.

இத்தகைய வெறுப்புணர்வு காஷ்மீர் மக்கள் மீது பிற மாநிலங்களில், தலைநகர் தில்லி உள்பட தாக்குதலாக வெளிப்பட்டது. பாஜக ஆளும் மாநி லங்களில் காவல்துறையினர் கண் முன்பாகவும் கூட நடந்து வருகிறது. சமீபத்தில் கிறிஸ்தவர் கள் மீதான தாக்குதலும் இந்த வெறுப்புக் கும்பல் களால் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து உலக மக்களின் கண்டனத்துக்குள்ளாகியது. 

அண்மையில் உத்தரகண்ட் மாநிலத்தில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் அஞ்சல் சக்மாவும் அவரது சகோதரர் மைக்கேல் சக்மாவும் டேராடூன் அருகே ஒரு கும்பலால், சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறி தாக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் அஞ்சல் சக்மா 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்துத்துவா கும்பலின் வெறியால் இந்திய நாட்டின் மிகச் சிறந்த மாணவர் ஒருவர் பலியாகிய பாதகம் வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் இது சகிப்புத்தன்மையற்ற அரசியலால் நிகழ்ந்தது என்றும் திரிபுரா மாநில எதிர்க் கட்சித் தலைவரும் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான ஜிதேந்திர சவுத்ரி கூறி யுள்ளது கவனிக்கத்தக்கது.

வரும் காலம் தேர்தல் காலமாக இருப்பதால் மேற்கு வங்கத்திலும் கூட இந்த கும்பல், வங்கதேச ஊடுருவல் பற்றி இன்னும் வெறித்தனமாகப் பேசவும் வெறியாட்டத்தில் ஈடுபடவும்  கூடும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பழங்குடி மக்கள் என பலரும் பாஜகவின் - இந்துத்துவா கும்பலின் - வெறுப்பு நடவடிக்கைகளில் பலியா வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வேற்றுமை யில் ஒற்றுமை, மத நல்லிணக்கம் போன்ற இந்தி யாவின் மாண்புகள் காக்கப்பட வேண்டும். நாட்டின் அரசியல் களத்தில் ஊடுருவியுள்ள இந்துத்துவா நச்சு அரசியலையும் வெறுப்பு அரசியலையும் முறியடிப்பது மக்களின் முதல் பெரும் கடமையாகும்.