headlines

img

புதிய சட்டம்; புதிய சூழ்ச்சிகள்!

புதிய சட்டம்; புதிய சூழ்ச்சிகள்!

இந்தியக் கிராமப்புற ஏழைகளின் வாழ்வா தார அரணாகத் திகழ்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNR EGA) முற்றிலும் சீர்குலைக்கும் நோக்கில் மோடி அரசு காய்நகர்த்தி வருகிறது. ஐக்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சியில் இடதுசாரிக ளின் வலுவான அழுத்தம் மற்றும் முயற்சியால் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தைப் பெயர் மாற்றம் செய்வதோடு மட்டுமல்லாமல், அதன் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கும் வகை யில் ‘விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டம்’ (VB-G RAM G Act, 2025) எனும் புதிய சட்டத்தை ஒன்றிய அரசு திணித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே நாட்களில், முறையான விவாதமின்றி இப்புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது மோடி அரசின் எதேச்சதிகாரப் போக்கின் உச்சமாகும். ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தத் துடிக்கும் இச்சட்டத் திற்கான 11 முக்கியப் பிரிவுகளின் கீழ் இன்னும் விதிகள் வகுக்கப்படவில்லை என்பது நிர்வா கச் சீர்கேட்டைத் தெள்ளத்தெளிவாகக் காட்டு கிறது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ‘வழி காட்டு நெறிமுறைகள்’ (Normative Alloc ation) எனும் பெயரில் பாரபட்சம் காட்டவும், பொ ருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாநிலங்களைப் புறக்கணிக்கவும் ஒன்றிய அரசு எத்தனிக்கிறது.

முந்தைய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்க ளின் கடந்த காலப் பங்களிப்பைக் கணக்கில் கொள்ளாமல், ‘புறநிலை அளவுருக்கள்’ (Obje ctive Parameters) எனும் தெளிவற்ற காரணங்க ளைக் காட்டி மாநில உரிமைகளைப் பறிக்க மோடி அரசு முயல்கிறது. குறிப்பாக, புவிசார் குறியீடு (Yuktdhara) மற்றும் வங்கித் தளமான ‘டிபிடி ஸ்பார்ஷ்’ (DBT Sparsh) போன்ற தொழில்நுட்பக் கட்டாயங்கள், இணைய வசதி யற்ற கோடிக்கணக்கான ஏழைத் தொழிலா ளர்களை இத்திட்டத்தை விட்டு வெளி யேற்றும் ஒரு மறைமுகச் சூழ்ச்சியாகும். இத்த கைய நடைமுறைச் சிக்கல்கள், வேலை வாய்ப்பு கோரும் ஏழைகளை மேலும் வறுமைக்குள்ளாக்குமே தவிர, ‘விக்சித் பாரத்’ கனவை ஒருபோதும் நனவாக்காது.

மேலும், கிராமப் பஞ்சாயத்துகளை ஏ, பி, சி எனத் தரம் பிரித்து, நகர்ப்புறங்களுக்கு அருகில் உள்ளவற்றுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்ப தன் மூலம், மிகவும் பின்தங்கிய மற்றும் தொலை தூரக் கிராமங்களில் வாழும் அடித்தட்டு மக்களின் வேலைவாய்ப்பு ஆதாரத்தை மோடி அரசு வேரறுக்க முயல்கிறது

சுருக்கமாகச் சொன்னால், ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் இந்த ‘விக்சித் பாரத்’ நாடகம், கார்ப்பரேட் நலன்களுக்காகக் கிரா மப்புற உழைப்பாளிகளை வஞ்சிக்கும் செய லாகும். மாநில உரிமைகளைச் சிதைக்கும், ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மோடி அரசின் இந்த மக்கள் விரோதச் சட்டத்தை ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டும்.