ஜனநாயகக் குரல்களை தேடித் தேடி ஒடுக்கும் பாஜக அரசு!
புதுதில்லி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது வெளியுறவுக் கொள்கைகளை விமர்சிக்கும் ஜனநாயகக் குரல்களை சமூக ஊடகப் பதிவுகளைத் தீவிரமாகத் தேடித் தேடி தணிக்கை செய்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) சர்ச்சைக்குரிய பிரிவான 69A ஐப் பயன் படுத்தி, பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்த பல்வேறு முக்கிய அரசியல்வாதி கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் இணை யப் பயனர்களின் பதிவுகள் முடக்கப் பட்டுள்ளன. ரகசியமாக நடக்கும் தணிக்கை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) பிறப்பிக்கும் இந்த உத்தரவுகள் ‘கடுமையான ரகசியத்தன்மை’ விதிகளின் கீழ் வருவதால், யார் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரங்களை அரசு வெளியிடுவதில்லை. இருப்பினும், எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இருந்து தங்களுக்கு வந்த ‘பதிவு நீக்க அறிவிப்புகளை’ (Takedown Notices) பயனர்கள் பொதுவெளியில் பகிர்ந்ததன் மூலம் பாஜகவின் இந்த பேச்சுரிமை தணிக்கை அம்பலமாகியுள்ளது. மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள தரவு களின்படி, 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் அரசு உத்தரவின் பேரில் நீக்கப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் பிரபல கார்ட்டூ னிஸ்ட் சதீஷ் ஆச்சார்யா, இந்தியா-ஈரான் உறவுகள் மற்றும் அமெரிக்காவின் தலையீடு குறித்து வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் எக்ஸ் தளத்தில் முடக்கப்பட்டுள்ளன. ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்குத் தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி பேசிய செய்திகளைப் பகிர்ந்ததற்காக, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் பத்திரிகையாளர் சுஷாந்த் சிங் ஆகியோரின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கு வதை நிறுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டிய ‘Honest Cricket Lover’ போன்ற அரசியல் விமர்சனக் கணக்குகளின் பதிவுகள் முடக்கப் பட்டுள்ளன. சட்ட வல்லுநர்களின் கவலை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ‘இண்டர்நெட் அண்ட் சொசைட்டி’ மையத்தின் இணை நிறுவனர் பிரனேஷ் பிரகாஷ், இந்தத் தணிக்கை நடவடிக்கைகள் “அரசியல மைப்பிற்கு விரோதமானது” என்று சாடி யுள்ளார். அரசாங்கம் எதன் அடிப்படையில் ஒரு பதிவை நீக்குகிறது என்ற காரணத்தை வெளியிடுவதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் நீதிமன்றத்தை அணுகி முறையிடக் கூட முடிவதில்லை. இது ஒரு ‘மறைமுகத் தணிக்கை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக நிறுவனங்கள் ஒரு பதிவை நீக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது 2-3 மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இத னால் சட்ட ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள நேரமின்றி, நிறுவனங்கள் அரசின் உத்தர வுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
