states

img

அமெரிக்காவில் அம்பானி ரூ.25.2 லட்சம் கோடி முதலீடு: எரிசக்தி ஆதிக்கத்திற்கு உதவி செய்ததாக டிரம்ப் நன்றி

அமெரிக்காவில் அம்பானி ரூ.25.2 லட்சம் கோடி முதலீடு: எரிசக்தி ஆதிக்கத்திற்கு உதவி செய்ததாக டிரம்ப் நன்றி

வாஷிங்டன் அமெரிக்காவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு  நிலையம் அமைக்க அம்பானி சுமார் 25.2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.  இதனை குறிப்பிட்டுள்ள டிரம்ப் உலகின் மீது எங்களது எரிசக்தி ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்ட உள்ளோம் என சொன்னதுடன் அம்பானிக்கு நன்றியும் கூறியுள்ளார்.   சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு டெக்சாஸ் மாகாணம் பிரவுன்ஸ்வில்லில் அமெரிக்காவின் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது. இதற்காக, அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 25.2 லட்சம் கோடி ரூபாய் (300 பில்லியன் டாலர்கள்) முதலீடு செய்துள்ளார்.  இந்நிலையில் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் அது குறித்து பதிவிட்ட டிரம்ப், அமெ ரிக்கா மீண்டும் சர்வதேச அளவில் எரிசக்தி துறை களின் மீது ஆதிக்கம் செலுத்த உள்ளது.  பிரவுன்ஸ்வில்லில் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங்’ (America First Refining) நிறுவனம் தனது புதிய சுத்திகரிப்பு நிலையத்தைத் திறக்கவுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவிக்கிறேன்.  இது 300 பில்லியன் டாலர் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம். எங்களது இந்திய நண்பர்களுக்கும், அந்நாட்டின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸ்-க்கும் இந்த திட்டத்தில் செய்துள்ள மிகப்பெரிய அளவிலான முத லீட்டிற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கி றேன் என குறிப்பிட்டுள்ளார். குஜராத்தின் ஜாம்நகரில் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு  நிலையத்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் ரஷ்யாவிடம் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கி சுத்திக ரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெருத்த லாபம் ஈட்டி வந்தது. இச்சூழலில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என  டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் இந்நிறுவ னத்தின் லாபம் பெருமளவு குறைந்தது.  தற்போது ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேலின் போரால் சர்வதேச அளவில் எண்ணெய் சுத்திகரிப்பு, ஏற்றுமதி என எரிசக்தி தொடர்பான அனைத்து வர்த்தகமும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெ ரிக்காவில்  முதலீடு செய்வது தனது நிறுவ னத்திற்கு பாதுகாப்பு என அம்பானியின் நிறுவ னம் முடிவெடுத்து இருப்பதாகக் கூறப்படு கிறது.