headlines

img

வன்முறையை வைரலாக்கும் சமூகம்!

வன்முறையை வைரலாக்கும் சமூகம்!

திருத்தணியில் நடந்த கொடூரமான தாக்கு தல் சம்பவம் நம் சமூகத்தின் முன் பல கேள்வி களை நிறுத்தியிருக்கிறது. ஒடிசாவைச் சேர்ந்த  இளைஞர் சூரஜ் மீது நடத்தப்பட்ட இந்த வன் முறை, வெறும் ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல; இது நம் சமூகத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் பல  நோய்களின் அறிகுறி.

சக மனிதனை மனிதனாகப் பார்க்கவிடா மல் தடுப்பதில், “நாம்–அவர்கள்” எனப் பிரித்துப்  பேசும் பிரிவினைவாதக் கொள்கைகளுக்குப் பெரும்பங்கு உண்டு. இத்தகைய வெறுப்புப் பேச்சு கள் இளைய தலைமுறையினரின் மனதில் நஞ்  சாகப் பாய்கின்றன. பாதிக்கப்பட்டவர் “வட மாநிலத்தவர்” என்பதற்கு முன்பாக அவர் ஒரு  தொழிலாளி, ஒரு மனிதர். குடும்பச் சூழலால் தன்  மாநிலத்தை விட்டு வெளியேறி, உயிர்வாழ்வதற்  காகச் சிறுசிறு வேலைகள் செய்து பிழைத்துக்  கொண்டிருந்தவர் அவர். நாமும் வேலைக்காக  வேறு மாநிலங்களுக்கோ, நாடுகளுக்கோ செல்  லும் போது நாமும் அங்கே ஒரு தொழிலாளி தானே? அப்போது நம்மை இழிவுபடுத்தினால் நாம் எப்படி உணர்வோம்?

“வடக்கன்” என்று யாரையும் இழிவுபடுத்தக் கூடாது என்று சொல்லும் அதே மூச்சில், “புள் ளிங்கோ” என்றாலோ அல்லது “வடசென்னை” என்றாலோ இப்படித்தான் இருப்பார்கள் என்று  முத்திரை குத்துகிற போக்கு சமமாக ஆபத்தா னது. ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள்  அல்லது ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவர்கள் என்று மனிதர்களைப் பிரித்துப் பார்க்கும் இந்த மனநிலையே எல்லா வன்முறைகளுக்கும் அடிப்படை.

இச்சம்பவத்தில் சமூக வலைதளப் போதை யும் “ரீல்ஸ்” ரவுடியிசமும் மிகக் கவலைக்குரிய விஷ யங்கள். தாக்குதலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் “கெத்து” காட்ட நினைத்த சிறார்களின் மனநிலை அச்சமூட்டுகிறது. வன்  முறையை ஒரு கொண்டாட்டமாக மாற்றும் இந்த  ரீல்ஸ் கலாச்சாரம், சிறுவர்களைக் குற்றவாளி களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. எளிதில் கிடைக்கும் மது, கட்டுக்கடங்காமல் பெருகும்  போதைப்பொருள்கள், வன்முறையைக் கொண்  டாடும் திரைப்படங்கள், சமூக வலைதளங்களில்  கட்டுப்பாடின்மை இவையெல்லாம் சேர்ந்து ஒரு விஷச் சூழலை உருவாக்கியிருக்கின்றன.

காவல்துறை இத்தகைய வன்முறையா ளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். குறிப்பாக, சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் வலம் வரும் “மினியேச்சர் ரவுடி களை” ஆரம்பத்திலேயே கண்டறிந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் இருந்து  இடைநின்ற மாணவர்களைக் கண்காணிப்ப தற்கும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கும் சிறப்புத் திட்டங்கள் அரசுக்கு அவசியம்.

நாம் வாழும் இந்த நிலம் அனைவருக்கும் பொதுவானது. உழைக்க வந்தவரை ஊனப் படுத்துவது நமது அறமல்ல. வன்முறையையும் பிரிவினையையும் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்  தப்பட வேண்டும். மனிதநேயம் மங்கி, வன்முறை  போதையாக மாறும் சமூகத்தில் எவருக்கும் பாதுகாப்பில்லை என்பதை அரசும், அனைத்து மக்களும் உணர வேண்டிய தருணம் இது.