புதுதில்லி, ஜன.08-
இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 82ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ், சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ், 70 சதவீதம் அதிவேகமாக பரவக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பல்வேறு உலக நாடுகளுக்கும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
இந்தியாவில் இதுவரை 71 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 82 ஆக அதிகரித்துள்ளது.