குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், 'இந்தியா' கூட்டணி சார்பில் சுதர்ஷன் ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் முதலாவதாக தனது வாக்கை பிரதமர் நரேந்திர மோடி பதிவு செய்தார். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, அதே நாளிலேயே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.