விளம்பரத் திட்டமா? உயிர்க்காக்கும் திட்டமா?
“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளு வர் வாக்கு; ஆனால், “நிதியின்றி அமையாது குடிநீர்” என்பதே இன்றைய கசப்பான எதார்த்தம். இந்தியாவின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் தற்போ தைய புள்ளிவிவரங்கள் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, மரண பயம் வந்து கொண்டிருப்பதை உறுதி செய்கின்றன.
ஜல் ஜீவன் மிஷனின் 2024 ஆய்வறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் சேகரிக் கப்பட்ட நான்கு குடிநீர் மாதிரிகளில் ஒன்று, அதாவது 25 சதவிகிதம் தரப் பரிசோதனையில் தோல்வியடைகிறது. பள்ளிகளில், அங்கன்வாடி களில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 27 சத விகிதம் நீர் மாதிரிகள் தோல்வியடைந்திருக்கின் றன. இது வெறும் காகிதப் புள்ளிவிவரம் அல்ல. மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாநகரில் நாம் கண்ட “நிர்வாகப் படுகொலைகளே” இதற்குச் சாட்சி. பாகீரத்புராவில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்ததால், 5 மாதக் குழந்தை உட்பட 25 பேர் உயிரிழந்த கொடுமையும், மௌ பகுதியில் சுத்தி கரிப்பு இன்றி 22 பேர் பாதிக்கப்பட்டதும் அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்குச் சான்றுகள். தர மற்ற நீரால் காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை என மரணங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
இந்நிலையில் மோடி அரசு என்ன செய்தது தெரியுமா? 2025-26 நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ஜல் ஜீவன் திட்டத்திற்கான நிதியை 75 சதவீதம் குறைத்தது. ஒரு திட்டம் தோல்வியட ைகிறது என்றால் நிதியை அதிகரிக்க வேண்டும்; அதைவிட்டு கத்தரிக்கோலை எடுக்கிறது மோடி அரசு. பராமரிப்பு நிலையங்கள் செயலிழக்கும், சுத்திகரிப்பு கட்டமைப்புகள் மூடப்படும், குழாய் இணைப்புகள் தொங்கும் — இனி வரும் மர ணங்களுக்கு எந்தத் துறை பொறுப்பேற்கும்?
இத்திட்டத்தில், தமிழ்நாடு 89.5 சதவிகித பணி களை நிறைவு செய்துவிட்டது. மீதமுள்ள பணி களை முடிக்க ரூ. 3,112 கோடி ஒன்றிய அரசின் பங்கிற்காக காத்திருக்கிறது. அந்தப் பணம் இன்னும் வரவில்லை. ஏனெனில் தமிழ்நாட்டில் பாஜக ஆளவில்லை.
கேரளா 55 சதவிகிதம் பணி நிறைவில் உழல் கிறது. புவியியல் சவால்களுக்கு மத்தியிலும், சொந்த நிதியில் முன்னேறும் அந்த மாநிலத் திற்கு மோடி அரசு “Zero Release” என்ற கொடூர மான நிலையை எடுத்திருக்கிறது. ஒரு ரூபாய் கூட விடுவிக்கவில்லை. இதைவிட நாணயமற்ற செயல் வேறொன்று இருக்கிறதா?
இது நிர்வாகத் தாமதமல்ல. இது அரசியல் பழிவாங்கல். மக்களின் தாகத்தை தேர்தல் கணக் கீட்டின் ஆயுதமாக்கும் இந்தச் செயல். குடிநீர் வழங்குவது அரசின் கருணை செயலல்ல — அது ஒவ்வொரு குடிமகனின் அரசியலமைப்பு உரிமை. ‘ஹர் கர் ஜல்’ (வீடு தோறும் குடிநீர்) என்று முழங்கிய ஒன்றிய அரசு, இப்போது நிதி ஒதுக்கீட்டில் 75 சதவீதம் கத்தரி போடுவதும், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதும் எவ்விதத்தில் நியாயம்?
