india

img

பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றத்தில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் - நிதி ஆயோக் அறிக்கை  

கல்வி, பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் என அனைத்திலும் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்வதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.    

இந்திய மாநிலங்களின் கல்வி, கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மாநிலங்களின் வளர்ச்சிகளை நிதி ஆயோக் தர வரிசைப்படுத்தி வருகிறது.

அதன்படி இந்திய அரசின் பொது கொள்கைக் குழுவான  நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. கல்வி, கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.  

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிதி ஆயோக் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் கேரளம் முதலிடத்தையும் தமிழகம் இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.