india

img

மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி நஷ்டம்.. நிதி ஆயோக் தகவல்..

புதுதில்லி:
மின்சாரம் விநியோகம் செய்த நிறுவனங்களுக்கு  2020- 2021 ஆம்நிதியாண்டில்  ரூ.90 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரும் முதலாளிகளுக்கு விசுவாசமாகவும் மக்களுக்கு விரோத மாகவும் செயல்படும் மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய தீவிரநடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்நிலையில் மின்சக்தி விநியோகத் துறையை மாற்றியமைப்ப தற்கான சீர்திருத்த வழிமுறைகள் என்ற பெயரில் பரிந்துரைக்கும் அறிக்கையை அறிக்கையை நிதி ஆயோக்கும், ஆர்எம்ஐ அமைப்பும் இணைந்து தயாரித்துள்ளன. இதனை நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், நிதி 
ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி.கே.சரஸ்வத், தலைமை செயல் அதிகாரி அமிதாப்காந்த், ஒன்றிய மின்சக்தித் துறை செயலர் அலோக் குமார் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்தியாவில் பெரும்பாலான மின்விநியோக நிறுவனங்கள் ஆண்டுதோறும் நஷ்டத்தை எதிர்கொள் கின்றன. 2020- 2021ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பின் அளவு மொத்தம் ரூ.90 ஆயிரம் கோடியாகும். அதிகரித்து வரும் இந்த நஷ்டங்களால் இந்தநிறுவனங்கள் மின் உற்பத்தி ஜெனரேட்டர்களுக்கான கட்டணங்களை செலுத்த இயலாமல், உயர்தரமின்சக்தியை உறுதிப்படுத்து வதற்கான முதலீடுகளை செய்ய இயலாமல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த இயலாமல் சிரமப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.