india

img

‘நினைவுச் சின்னங்களைக் கண்டு அச்சப்படுகிறது பாஜக அரசு’

புதுதில்லி:
நாட்டின் வரலாற்றைக் கண்டு பயப்படுகிறீர்கள், நினைவுச் சின்னங்களைக் கண்டும் பயப்படுகிறீர்கள் என்று மத்திய அரசை  மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங் களவை உறுப்பினர் கே.கே. ராகேஷ்குற்றம்சாட்டினார்.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் 2019ஆம் ஆண்டு ஜாலியன்வாலாபாக் தேசிய நினைவு திருத்தச் சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் கே.கே. ராகேஷ் பேசியதாவது:நம்முடைய மாபெரும் தேசம்,எண்ணற்ற தியாகிகளின் ரத்தத்தை சிந்தியும், உயிரைக் குடித்தும் கட்டிஎழுப்பப் பட்ட ஒன்றாகும். ஜாலியன் வாலாபாக் படுகொலையில் எண்ணற்ற தியாகிகள் ரத்தம் சிந்தியுள்ளார்கள். உத்தம் சிங், பகத் சிங்,லால் பத்மா தார், ஹேமா களனி, குதிராம் போஸ் என எண்ணற்றதியாகிகளை நாம் பெற்றிருக்கிறோம்.  புன்னப்புரா – வயலார் விவசாயிகள் எழுச்சி, தெலுங்கானா போராட்டம் மற்றும் தேபாகா போராட்டம் ஆகியவற்றில் எண்ணற்ற தியாகிகள் உயிர்நீத்திருக்கிறார்கள். இத்தகைய எண்ணற்ற தியாகிகளின் அர்ப்பணிப்பின் மீதுதான் நம் மாபெரும் தேசம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.நூறாண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் சமயத்தில் இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

முற்றுப்புள்ளிக்கான தொடக்கப்புள்ளி
நூறாண்டுகளுக்கு முன்பு, 1919இல், ஜெனரல் டயர் என்பவனின் கீழ் இயங்கிய பிரிட்டிஷ் துருப்பு கள் நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களைக் கொன்று குவித்தது. மிகவும் இக்கட்டான பின்னணியில் இந்தப் படுகொலைகள் நடைபெற்றன. இது, நாடு முழுதும் தேசியஇயக்கத்தை, சுதந்திர இயக்கத்தை, எழுச்சிகொள்ளச் செய்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் மகத்தான எழுச்சி ஏற்பட்டது. உண்மையில், நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான இயக்கம் இதிலிருந்துதான் தொடங்கியது.நாட்டின் விடுதலைக்காகப் போராடும் சக்திகளுக்கு, ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் எப்போதும் உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கும். வருங்கால சந்ததியின ருக்கும் அது உத்வேகம் அளித்திடும்.அத்தகைய நினைவுச் சின்னத்தைச் சிறப்பான முறையில் பேணிப் பாதுகாத்து வருவது மிகவும் முக்கியமாகும்.

உண்மை நோக்கம் என்ன?
ஆனால் இந்தத் திருத்தச் சட்டமுன்வடிவு கொண்டுவந்திருப்ப தற்கான உண்மையான நோக்கம் குறித்து நான் கவலைப்படுகிறேன். அதன் அறக்கட்டளையின் தலைவர் பொறுப்பிலிருந்து காங்கிரஸ்தலைவரை நீக்க வேண்டும் என்பதற்காகவே இது கொண்டுவரப் படுகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. மேலும் இந்தச் சட்டமுன்வடிவின் பின்னே ஒளிந்திருக்கும் ரகசிய நிகழ்ச்சிநிரலும் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஜாலியன்வாலாபாக்கில் நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டத்தில்எவ்விதப் பங்குமே செலுத்தாத ஆளும் கட்சி உறுப்பினர்கள் இந்தத்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதனைத் தங்களின் முழுக்கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்திட இவ்வளவு ஆர்வமாக இருப்பது  ஏன்என்று எனக்குத் தெரியவில்லை.
வரலாற்று நினைவுச் சின்னங்கள்என்பவை வெறும் நினைவுச் சின்னங்கள் மட்டும் அல்ல. அவை நமக்கு நம்முடைய மாபெரும் வரலாற்றைக் கூறுகின்றன. நினைவுச் சின்னங்கள் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தவைகளாகும். அத்தகைய நினைவுச்சின்னங்களை உங்களின் முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள நீங்கள் விரும்புவது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

பயப்படுகிறீர்கள் 
சமீபத்தில் நம் உள்துறை அமைச்சர், நாட்டின் வரலாறு திருத்திஎழுதப்படும் என்று ஒரு பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாகவே கூறினார். நீங்கள் ஏன் வரலாற்றை மாற்றி எழுத விரும்புகிறீர்கள்? நீங்கள் எப்போதுமே வரலாற்றைக் கண்டு பயப்படுகிறீர்கள். எனவேதான் நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களைக் கண்டும் நீங்கள் பயப்படுகிறீர்கள். ஏனெனில் அவைநாட்டின் மாபெரும் வரலாற்றைநமக்குக் கூறிக் கொண்டிருக் கின்றன.சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் உங்களுக்கு என்ன பங்களிப்புஇருந்தது என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் நீங்கள் அப்போது பிரிட்டிஷாரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடனமாடிக் கொண்டிருந்தீர்கள். மக்களை மதரீதியாகப் பிளவு படுத்த முயற்சித்துக் கொண்டிருந் தீர்கள். அதுதான் பிரிட்டிஷாரின் கொள்கையாகும். பிரிட்டிஷார் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத் திட முயற்சித்துக் கொண்டிருந் தார்கள். பிரித்தாளும் சூழ்ச்சிதான் பிரிட்டிஷாரின் கொள்கை யாகும். அந்த சமயத்தில் நீங்களும்அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியைத்தான் பின்பற்றிக்கொண்டி ருந்தீர்கள். எனவேதான் மாபெரும் இந்தநினைவுச் சின்னத்தை உங்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, இதனை ஆதரிப்பதற்கான காரணம் எதையும் என்னால் கூற முடியவில்லை. ஏனெனில் தீய நோக்கத்துடன் இது கொண்டுவரப் பட்டிருக்கிறது. இவ்வாறு கே.கே. ராகேஷ் கூறினார். (ந.நி.)