தெருநாய்கள் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் வரும் நவம்பர் 3ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெருநாய் விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதியன்று தெருநாய்கள் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து 2 மாதத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், தில்லி, மேற்கு வங்கம், மற்றும் தெலங்கானா ஆகிய அரசுகள் மட்டுமே இது தொடர்பான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன.
இந்த சூழலில், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், அதன் தலைமைச் செயலாளர்கள் வரும் நவம்பர் 3ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
