india

img

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் பெயர் பரிந்துரை!

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்தின் பெயரை, தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரைத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் வரும் நவம்பர் 23 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த சூழலில், அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்தின் பெயரை பரிந்துரைத்து அவர் ஒன்றிய சட்டத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த பிறகு, நீதிபதி சூர்யகாந்த் 53ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார். அதன்பின், அவர் வரும் நவம்பர் 24ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.