india

img

பிரதமர் மோடி அரசியல் சட்டத்தை படிக்கவில்லை ராகுல் காந்தி விமர்சனம்

புதுதில்லி இந்திய அரசியல் அமைப்புச்சட்ட தின நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர்  ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி அரசியல் சாசனத்தை படிக்கவில்லை என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும் என விமர்சித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் சாவர்க்கரின் நோக்கங்கள் எங்காவது இருக்கிறதா? வன்முறையை ஏற்படுத்த வேண்டும், மக்களை படுகொலை செய்ய வேண்டும், அல்லது பொய்யை பரப்பி  அரசை நடத்த வேண்டும் என்று எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா? அரசியல் அமைப்புச்சட்டம் என்பது  உண்மை மற்றும் அகிம்சையின் புத்தகம். பிரதமர் மோடி இந்திய அரசியல் அமைப்புச் சட்ட புத்த கத்தைப் படித்திருந்தால் அவர் தினந்தோறும் செய்யும் செயல்களை  செய்திருக்க மாட்டார் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  

மேலும் அவர் தொடர்ந்து பேசிய போது  அவரது மைக் அணைந்தது. அப்போது, இந்த நாட்டில்  தலித்துகள், பழங்குடியினர், பிற் படுத்தப்பட்டோர் அல்லது ஏழைகள் பற்றி யார் பேசினாலும் அவர்களின் மைக் அணைக்கப் பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசிய போது அவர்களது மைக்கை அணைத் ததை குறிப்பிட்டுப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசிய போது, சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிரதமர் மோடி அஞ்சுகிறார் என விமர்சித்தார்.   

பாஜக உண்மையில் நாட்டில் ஒற்றுமையை விரும்புமானால் ,  வெறுப்புணர்வை  பரப்பு வதை நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் அவர்  மின்னணு வாக்குப்பதிவு முறையை விமர்சித்ததுடன், கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட  வாக்குச் சீட்டு  முறைக்கு திரும்ப வேண்டும். அதற்காக நங்கள் பிரச்சாரம் செய்வோம் என குறிப்பிட்டார்.