தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காத பாஜக அரசை கண்டித்து, இந்தியா கேட் முன்பு ஆயிரக்கணக்கானோர் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபக் காலங்களில் தில்லியின் காற்று தரக்குறியீடு (AQI) 300-ஐ தாண்டி மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள், மூத்த குடிமக்கள், பொதுமக்கள் என அனைவரும் சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.இந்நிலியில் நேற்று மாலை இந்தியா கேட் முன்பு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காற்று மாசை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஜே.என்.யூ மாணவர் சங்க துணத்தலைவர் கோபிகா உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை அம்மாநில அரசாங்கம் அராஜகமாக கைது செய்தது
இந்நிலையில் காற்று மாசை தடுக்க வேண்டும் என போராடிய சிறுவர்களை கூட அம்மாநில அரசாங்கம் கைது செய்துள்ளது நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
