பள்ளி சென்ற 8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த அசாமை சேர்ந்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 8 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளார். குழந்தை, தான் கடத்தப்படும் போது தப்பிப்பதற்காக கடத்தல்காரரின்கண்களில் மண்ணை அள்ளி வீசி இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி குழந்தையை தாக்கி வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். குழந்தை கடுமையான காயங்களுடன் தப்பித்து தன் வீட்டுக்குச் சென்று விட்டது.
பின்னர் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த ஜூலை 25ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், குற்றவாளி பிஸ்வகர்மா (35) என்பதும், அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. வழக்கு விசாரணை முடிவில், மாவட்ட போக்சோ நீதிமன்றம் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1.45 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
