india

img

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

அதானி லஞ்சம் வழங்கிய விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முழக்கமிட்ட நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
2024-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது, சீத்தாராம் யெச்சூரி உட்பட உயிரிழந்த முன்னாள் எம்.பி-க்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மணிப்பூர் கலவரம் மற்றும் அதானி லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முழக்கம் எழுப்பினர். இந்த சூழலில், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாளை அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், இரு அவைகளும் வரும் நவம்பர் 27-ஆம் தேதி தொடங்க உள்ளது.