india

img

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

மாநிலங்களவையில் கும்பமேளா உயிரிழப்பு சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், திமுக, சிபிஎம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
உ.பி மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கூட்ட நெரிசல் காரணமாக கடந்த ஜன.29-ஆம் தேதி 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், கும்பமேளா உயிரிழப்பு சம்பவம் குறித்து விவாதிக்கக்கோரி மக்களவை எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். 
அதே போல், மாநிலங்களவையில் கும்பமேளா உயிரிழப்பு சம்பவம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நோட்டீஸ் அளித்தனர். இது தொடர்பாக விவாதம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தனர்.