2025-26ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இது குறித்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
* விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
* முதல் முறையாக தொழில்முனைவோராகத் தொடங்கும் பட்டியலின மற்றும் பழங்குடி பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்.
* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்ச வரம்பு, ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது.
* காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74%-இல் இருந்த 100%-ஆக உயர்த்தப்படுகிறது.
* ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
* புதிய வருமான வரி திட்டத்தில்,
ரூ.4,00,000 வரை - வரி இல்லை
ரூ.4,00,001 முதல் ரூ.8 லட்சம் வரை - 5% வரி
ரூ.8,00,0001 முதல் ரூ.12 லட்சம் வரை - 10% வரி
ரூ.12,00,001 முதல் ரூ.16 லட்சம் வரை - 15% வரி
ரூ.16,00,001 முதல் ரூ.20 லட்சம் வரை - 20% வரி
ரூ. 20,00,001 முதல் ரூ. 24 லட்சம் வரை - 25% வரி
ரூ.24 லட்சத்துக்கு மேல் - 30% வரி
* அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாக உயர்வு.
* வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 சொந்த வீடுகளுக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி சலுகை நீட்டிப்பு.
* மூத்த குடிமக்களின் சேமிப்பு மீது கிடைக்கும் ரூ.1 லட்சம் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு; இதுவரை ரூ.50,000 வரையே வரி விலக்கு வழங்கப்பட்டு வந்தது.
* கல்விக் கடனாக செலுத்தப்படும் தொகை மீது விதிக்கப்படும் TCS வரிப்பிடித்தம் ரத்து.
* உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரி முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் 6 வகை மருந்துகளுக்கு 5 சதவிகிதம் வரியில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
* அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
* நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.