விமான விபத்தில் பலியானோர் உடல்கள் மீட்பு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் ஒன்றுக்கொன்று நடுவானில் மோதி ஆற்றில் விழுந்த விபத்தில் பலியானவர்களில் 40 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்துக்குள்ளான விமானங்களின் கருப்புப் பெட்டிகள், விமானிகள் உரையாடலை பதிவு செய்துள்ள கருவி ஆகியவற்றை மீட்புக்குழு கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் மிரட்டல்
டாலருக்கு மாற்றாக வேறு ஒரு புதிய நாணயத்தை உருவாக்கினால் பிரிக்ஸ் நாடுகளின் மீது கண்டிப்பாக 100 சதவீத வரியை விதிப்பேன் என டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள் ளார். பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை விட்டு விலகிச்செல்ல முயற் சிக்கின்றன. புதிய நாணயத்தை நோக்கி சென் றால் அந்நாடுகள் 100 சதவீத வரியை எதிர் கொள்ள நேரிடும். எங்களுடைய பொருளாதா ரத்தில் வர்த்தகம் செய்யும் எதிர்பார்ப்பைக் கைவிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் புதிய சாதனை
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே 62 மணி 6 நிமிடங்கள் வரையில் விண்வெளி யில் நடந்து சுனிதா வில்லியம்ஸ் புதிய சாதனை படைத் துள்ளார். கடந்த 2017 இல் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன் 60 மணி 21 நிமிட வரை விண்வெளி யில் நடந்துள்ளார். சுனிதா மற்றும் அவரது சக வீரர் புட்ச் வில்மோர் விண்வெளி நிலையத்தில் செயலி ழந்த ரேடியோ தகவல்தொடர்பு பிரிவை அகற்ற விண் வெளியில் 5 மணி நேரத்திற்கு மேல் நடந்து சென்ற போது கடந்த காலத்தில் நடந்த நேரத்துடன் இதுவும் இணைந்து இந்த சாதனை உருவாகியுள்ளது.
20,000 ஆயிரம் பாலஸ்தீனர்களை துரத்திய இஸ்ரேல்
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனின் பகுதியில் சுமார் 20 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் இஸ்ரேல் ராணுவம் மேற்கு கரை பகுதியில் நடத்திய துப்பாக்கிச் சூடு படுகொலைகள், வலுக்கட்டாயமான கைது போன்ற கொடுமைகளின் விளைவாக இவர்கள் இடம்பெயர்ந்து சென்றதாகத் தெரிவித்துள்ளனர். 20 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்தது மட்டுமல்லாமல் சுமார் 40 ஆயிரத்துக் கும் அதிகமான மக்கள் இஸ்ரேலின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தை மீறினால் தாக்குவோம்: ஹவுதி எச்சரிக்கை
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறினால் நாங்கள் மீண்டும் ஏவு கணைத் தாக்குதலை நடத்துவோம் என ஹவுதி அமைப் பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அமெ ரிக்கா தான் இந்த கொடுமைகளுக்கும், போருக்கும், நாடுகள் அடிமைப்படுத்தப்படுவதற்கும் காரணமாக உள்ளது. அமெரிக்கா இஸ்ரேலை பின்பற்றினால் அவர்களின் அடிமைகளாக தான் இருப்பீர்கள் என அரேபியர்களும் முஸ்லிம்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க ஆதரவு மத்திய கிழக்கு நாடுகளையும் ஹவுதி விமர்சித்துள்ளது.