சேலம்,பிப்.03- பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் முனைவர் படிப்பிற்கு இளங்கலை( கலை மற்றும் அறிவியல்) 4 ஆண்டு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மாணவர் சேர்க்கைக்கான கல்வித் தகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அறிவிப்பைத் திரும்பிப் பெற வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.