court

img

வேங்கைவயல் வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

வேங்கைவயல்,பிப்.03- வேங்கைவயல் வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திலிருந்து நீதித்துறை நடுவர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த விசாரணையில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை ஏற்பதாகவும், மேலும், இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால் வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று சிபிசிஐடியின் மனுவை ஏற்று வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகப் புதுக்கோட்டை நீதிமன்றம் அறிவிப்பு.