court

img

சுசி ஈமு கோழி மோசடி - குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!

கோவை,ஜனவரி.29- ஈமு கோழி மோசடி வழக்கில் சுசி ஈமு பார்ம்ஸ் உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுசி நிறுவன அலுவலகத்தின் பொள்ளாச்சி கிளை அலுவலகத்தில் 1087 பேர் முதலீடு செய்து ஏமாந்தனர். இவர்களிடம் இருந்து ரூ.19.03 கோடி  செய்ததாகக் கடந்த 2012ஆம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கின் விசாரணை சோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. 
ஈமு கோழி மோசடி வழக்கில் குற்றவாளியான சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் மோசடி செய்த தொகையான ரூ.19 கோடி அபராதமும் விதித்து கோவை TANPID நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.