india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ரம்ஜான், பக்ரீத் பண்டிகைக்கு அடுத்து இஸ்லா மியர்கள் கொண்டாடும் மிக முக்கிய பண்டிகை களில் ஒன்றான மிலாடி நபி செவ்வாயன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

“அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால் தான் கோப்புகள் விரைவாக நகர்கின்றன” என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார். 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத் துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு 55 அமைப்புகள், தனிநபர்கள் 1000 பேர் சேர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். 

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி புவ னேஸ்வரில் (பாஜக ஆளும் ஒடிசா தலைநகர்) செவ்வாயன்று (செப்.,17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இம்பால்

மணிப்பூரில் செப்., 20 வரை இணைய சேவைக்கு தடை

வடகிழக்கு மாநிலங்களில் ஒன் ்றான மணிப்பூர் பாஜகவின் வகுப்புவாத அரசியல் சூழ்ச்சி யால் கடந்த 17 மாதங்களாக பற்றி எரிந்து வருகிறது. இந்த வன்முறையால் 230க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்தி லேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்ற னர். மணிப்பூரில் இன்னும் வன்முறை சம்ப வங்கள் கட்டுக்குள் வராத நிலையில், வன் முறையின் புதிய உச்சமாக டிரோன்கள், சிறிய விமானங்கள், ராக்கெட் லாஞ்சர் மூலமாக தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனிடையே வன் முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூரின் மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபால், பிஸ்னுபூர், கக்சிங் ஆகிய 5 மாவட்டங் களில் இணைய சேவைக்கான தடை செப்., 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.