india

img

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு - காலை 11 மணி நிலவரம்

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி, 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில், மூன்று கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி, மொத்தமாக 11.11% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதை அடுத்து, காலை 11 மணி நிலவரப்படி, 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கிஷ்த்வாரில் 32.69% வாக்குகளும், குறைந்தபட்சமாக புல்வாமாவில் 20.3% வாக்குகளும் பதிவாகியுள்ளன. அதேபோல், அனந்த்நாக்கில் 25.5%மும், தோடாவில் 32.2%மும், குல்கமில் 25.9%மும், ரம்பனில் 31.25%மும், சோபியானில் 25.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.