india

img

எல்லை மீறும் “வந்தே பாரத்” ரயில் துவக்கவிழா ஷுட்டிங் நூலிழையில் உயிர் தப்பிய பாஜக பெண் எம்எல்ஏ

ரயில்வே துறையை தனியார்மய மாக்கும் முயற்சியாக சாமானிய மக்க ளும் சொகுசாக பயணம் செய்ய லாம் என்று கூறி, நாடு முழுவதும் “வந்தே பாரத்” என்ற பெய ரில் சொகுசு ரயிலை ஒன்றிய அரசு இயக்கி வருகிறது. சாமானிய மக்கள் பயணம் செய் யும் ரயில் என மோடி அரசு கூறிக்கொண்டா லும், “வந்தே பாரத்” ரயிலின்  சாதாரண கட்டணமே ரூ.1,000க்கு மேல் உள்ளது.

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நெருங்கினால் பிரதமர் மோடி “வந்தே பாரத்” ரயில் பெட்டியை கொண்டு வந்து துவக்கவிழா என்ற பெயரில் அரசு நிகழ்வை அரசியல் பிரச்சார நிகழ்வாக மாற்றி ஷூட்டிங் நடத்த ஆரம்பித்து விடு வார். இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டி ரா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் (இடைத்தேர்தல்) மாநிலங்களின் சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக “வந்தே பாரத்” ரயில் பெட்டியை வைத்து பிரதமர் மோடி தொடர் ச்சியாக ஷூட்டிங் செய்து வருகிறார். 

இந்நிலையில், இந்த “வந்தே பாரத்” ரயில் துவக்கவிழாவின் பொழுது உத்த ரப்பிரதேச பாஜக பெண் எம்எல்ஏ ஒருவர் நிலை தடுமாறி தண்டவாளத்திலிருந்து கீழே விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்றும் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் இருந்து வாரணாசிக்கு புதிதாக “வந்தே பாரத்” ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி இந்த வந்தே பாரத் ரயில் சேவையை தொ டங்கி வைத்தார். துண்ட்லா ரயில் நிலையத்தில் “வந்தே பாரத்” ரயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரயிலை வர வேற்க ஏராளமானோர் ரயில்வே நடை மேடையில் திரண்டு இருந்த நிலையில், பாஜக பெண் எம்எல்ஏ சரிதா பகதுரியா கூட்ட நெரிசலால் நிலை தடுமாறி ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தார். “வந்தே  பாரத்” ரயில், ஸ்டேஷனில் நிற்பதற்காக மெதுவாக வந்ததால் உடனடியாக நிறுத் தப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக பாஜக பெண் எம்எல்ஏ உயிர் தப்பினார்.