headlines

img

தாய்மொழிக் கல்விக்கு மேலும் ஒரு வெற்றி

தாய்மொழிக் கல்விக்கு  மேலும் ஒரு வெற்றி

மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தியை கற்பிக்கும் வகையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான இரு அரசாணை களை திரும்பப் பெறுவதாக மாநில பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது.  தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்பதற்காகவே தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ஆட்சியாளர்கள் கூறி வருவது அப்பட்ட மான பொய்யாகும்.

இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கா கவே தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப் பட்டுள்ளது. இந்த கொள்கையின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததன் கார ணமாகவே தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை தர மறுத்து ஒன்றிய அரசு அடாவடி செய்து வருகிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே ஒன்றிய அரசு இந்த நிதியை வழங்கும் என்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந் திர பிரதான் தொடர்ந்து கூறி வருகிறார்.

மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அறிவித்துள்ள மகாராஷ்டிர மாநிலத்திற் கும், ஒன்றிய அரசு நிதியை மறுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமே இந்தித் திணிப்பை எதிர்ப்பதாகவும், ஏனைய மாநிலங்கள் அனைத்தும் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் ஒன்றிய ஆட்சியாளர்கள் கூறி வந்ததும் முழுபொய் என்பதை மகாராஷ்டிர மாநிலம் நிரூபித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில பாஜக கூட்டணி அரசின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தலைமையி லான சிவசேனை மட்டுமின்றி, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனையும் இணைந்து கூட்டுப் போராட்டத்தை அறிவித்திருந்தன. இந்த நிலையில்தான் பாஜக கூட்டணி அரசு பின்வாங்கியுள்ளது. 

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பில் ஈடுபடுவதை கை விட்டு அனைத்து மொழிகளையும் பாரபட்ச மின்றி சமமாக நடத்திட ஒன்றிய அரசு முன்வர வேண்டும். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் வழிநடத்தப்படுவதால் தமிழ் உள்ளிட்ட மொழி களை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது. உதாரண மாக கடந்த பத்து ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி க்கு ரூ.2,532.59 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாடு தனித்துவிடப்படவில்லை. பல்வேறு மாநிலங்களும் அவரவர் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உரத்துக் குரல் எழுப்புகின்றன. எந்தவொரு மொழிக்கும் யாரும் எதிரி அல்ல. ஆனால் வம்படி யான திணிப்பு என்பது பண்பாட்டு அழிப்பாக வும், பன்முகத்தன்மை ஒழிப்பாகவும் இருப்பதனா லேயே எதிர்ப்பு எழுகிறது. ஒன்றிய ஆட்சியா ளர்கள் இப்போதாவது இதை புரிந்து  கொள்ள வேண்டும்.