புதுதில்லி, டிச. 11 - அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டு, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட பிரச்சனைகளால் நாடாளுமன்றம் மீண்டும் முடங்கியது.
அதானியின் ஊழல் குறித்த விவா தத்திற்கு அனுமதி மறுப்பதுடன், எதிர்க் கட்சி உறுப்பினர்களிடம் பாரபட்சத்துடன் நடந்து கொள்ளும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மீது இந்தியா கூட்டணி கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன.
காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 60-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத் திட்ட தீர்மானத்தை மாநிலங்களவை செய லரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.
இந்நிலையில், புதன்கிழமை காலை அவை கூடியவுடன் மாநிலங்களவை தலை வருக்கு எதிரான தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
பதிலுக்கு அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் - சோனியா காந்தி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றுபாஜக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
மாநிலங்களவையில் கிரண் ரிஜிஜூ கொதிப்பு
அப்போது பேசிய நாடாளுமன்ற விவ காரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “மாநிலங்களவைத் தலைவரை மதிக்கத் தெரியாத உங்களுக்கு (எதிர்க்கட்சி களுக்கு), அவரை விமர்சிக்க எந்த உரிமை யும் கிடையாது. நமது மாநிலங்களவைத் தலைவரைப் போன்ற ஒருவரை கண்டு பிடிப்பது கடினம். அவர் எப்போதும் ஏழை களின் நலன் குறித்தும் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்து வம் குறித்தும் பேசுகிறார். நாடகம் நடத்து வதற்காக கொடுக்கப்பட்ட நம்பிக்கை யில்லாத் தீர்மான நோட்டீஸ் வெற்றி பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றுகொதித்தார்.
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
இதனால் அவையில் கடும் அமளி ஏற்படவே 12 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக மக்களவையிலும் அதானி, ஜார்ஜ் சோரஸ் விவகாரம் காரணமாக நாள் முழு வதும் அவை நடவடிக்கைகள் முடங்கின.
ரோஜாவுடன் தேசியக்கொடியை பரிசளித்த இந்தியா கூட்டணி
மக்களவை கூடுவதற்கு முன்னதாக, அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தும் நோக்கில், மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், பாஜக எம்பிக்களுக்கு ரோஜா பூ மற்றும் தேசியக் கொடியை பரிசளித்த னர். ராகுல் காந்தி பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தார்.
நாட்டை நடத்துவது மோடியல்ல, அதானி தான்!
இதுபற்றி பேசிய காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட், “தேசியக் கொடியை விநியோகித்தோம். நாட்டை விற்க வேண் டாம் என்றும், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம் என்றும் கேட்டுக் கொண்டோம். துரதிர்ஷ்டவசமாக, தற் போது அதானிதான் நாட்டை நடத்துகிறார் என்பதைப் பார்க்கிறோம். அனைத்தும் அவருக்கு த்தான் கொடுக்கப்படு கிறது. ஏழைகளின் குரல் நசுக்கப்படுகிறது. நாட்டை விற்கும் சதிக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.