india

img

பீகார் தேர்தலுக்கு விளம்பரம் தேடும் மோடி அரசு!

வாகனங்கள் விலை குறைப்பை பயன்படுத்தி, பீகார் தேர்தலுக்கு மோடி அரசு விளம்பரம் தேடி வருகிறது.

வரும் செப் 22-ஆம் தேதி முதல், இருசக்கர மோட்டார் வாகனங்கள் (350 சிசி வரை), சிறிய வகைக் கார்கள், 10 நபர்கள் வரை இருக்கை வசதி கொண்ட சிறு பேருந்துகள், வணிக ரீதியான சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி 28% இல் இருந்து 18% ஆக குறைக்கப்படகிறது. இந்த நிலையில், ஜிஎஸ்டி குறைப்பால், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை குறையும் நிலையில், விற்பனை செய்யும் இடங்களில், எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என விலை பட்டியலை விளம்பரப்படுத்தவும், பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் சுவரொட்டிகள் இடம் பெற வேண்டும் எனவும் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மோடி அரசு அறிவுறுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.  

பீகார் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில், மோடி அரசு இவ்வாறு விளம்பரம் தேடி வருகிறது.