நேபாளத்தில் நிலைமை சீராகும் வரை இந்திய குடிமக்கள் யாரும் அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நேபாளத்தில் நிலவு வரும் பதற்றம் காரணமாக இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில், நேபாளத்தில் நிலைமை சீராகும் வரை இந்திய குடிமக்கள் யாரும் அந்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருக்கவும், வெளியே செல்வதைத் தவிர்க்கவும், உள்ளூர் பாதுகாப்பு வழிகாட்டுதலையும், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் வழிகாட்டுதலையும் பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள இந்தியர்கள், அவசர உதவிக்கு காட்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை +977 – 9808602881 மற்றும் +977 – 9810326134 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.