ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
2025-ஆம் ஆண்டுக்கான டெட் தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கான தேர்வு வரும் நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வெழுத தகுதி பெற்றவர்கள் https://trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.