india

img

‘ஏர் இந்தியா’வுக்கு மோடி அரசு ரூ. 822 கோடி பாக்கி... எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்

புதுதில்லி:
நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா’, பொறுப்பற்ற மத்திய ஆட்சியாளர்களால், 52 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தள்ளப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தை முழுமையாக தனியார் முதலாளிகளுக்கு விற்றுவிட மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு வந்து சேர வேண்டிய தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தற்போது பதில் அளித்துள்ளது.அதில், “குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை அழைத்துச் செல்வதற்காக- விமானங்களை இயக்கியதில் பல அமைச்சகங்கள், ‘ஏர் இந்தியா’வுக்கு தர வேண்டிய, 822 கோடி ரூபாயை இன்னும் செலுத்தாமல் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை ஏற்றிவந்த வகையில் 12.65 கோடி ரூபாய், ஆட்களை வேறு இடத்திற்கு வெளியேற்றும் (மீட்புப்) பணியில் ஈடுபட்ட வகையில் 9.67 கோடி ரூபாய் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, போதுமான அளவு வி.வி.ஐ.பி விமானங்கள் இல்லாததால் அரசு அதிகாரிகள் பயணம் செய்ய விமான டிக்கெட் எடுத்துத் தந்த வகையில் 526 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 236 கோடியே 16 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது என்றும் ‘ஏர் இந்தியா’ பட்டியலிட்டுள்ளது.