india

img

கெஜ்ரிவால் இன்று ராஜினாமா

மதுபான கொள்கை வழக்கில் தொ டர்பு இருப்பதாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ-யால் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த டுத்து கைது செய்யப் பட்டு 6 மாத கால மாக தில்லி திகார் சிறையில் அடைக்கப் பட்டு இருந்தார். அம லாக்கத்துறை வழக் கில் கடந்த ஜூலை மாதமே ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் செப்., 13  அன்று தான் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதி மன்றம் ஜாமீன் வழங்கியது.

உச்சநீதிமன்றம் தனது ஜாமீன் (சிபிஐ வழக்கில்) உத்தரவில்,”முதல்வர் அலு வலகத்துக்கு செல்லக்கூடாது; ஆவ ணங்களில் கையெழுத்து போடக் கூடாது” என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் கெஜ்ரிவால் செப்., 17 (செவ்வாயன்று) அன்று தில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். 

மாலை 4:30க்கு...

இந்நிலையில், தில்லி ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோ ரிக்கை விடுத்துள்ளார். ஆளுநரை சந்திக்க கெஜ்ரிவால் நேரம் கேட்டிருந்த நிலையில், செவ்வாயன்று மாலை 4.30 மணிக்கு இந்த சந்திப்பு நடக்க உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆளு நர் சந்திப்பின் பொழுது கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. 

அடுத்த முதல்வர்?

தில்லியின் அடுத்த முதல்வர் பதவி யில் அமர கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அல்லது அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய், சவுரப் பரத்வாஜ் ஆகியோர்களில் யாராவது ஒருவர் அடுத்த முதல்வ ராகும் வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அதிஷிக்கு 60% கூடுதல் வாய்ப்புள்ளது என ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறியுள்ளன.