india

பழைய கார்கள், பாப்கார்னுக்கான ஜிஎஸ்டி 18 சதவிகிதமாக உயர்வு!

புதுதில்லி, டிச. 21 - பயன்படுத்தப்பட்ட கார்கள் விற் பனை மற்றும் சுவை கூட்டப்பட்ட பாப்  கார்னுகளுக்கு 18 சதவிகிதம் வரி  விதிக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு, ஒரே யடியாக 35 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க வும் தீர்மானித்துள்ள மோடி அரசு, ஆயுள் காப்பீடு பிரீமியங்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. கடியாரங்கள், பேனா, காலணிகள் மற்  றும் ஆடைகளுக்கான ஜிஎஸ்டி வரி களை உயர்த்துவது உள்ளிட்ட 148  பொருட்களுக்கான வரி விகிதத்தை மாற்றியமைக்கவும் திட்டமிட்டுள்ளது.