புதுதில்லி, நவ. 26 - ஒன்றிய பாஜக அரசின் விவசாயிகள் - தொழிலாளர் விரோதக் கொள்கை களுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங் களும் சம்யுக்த கிசான் மோர்ச்சா இணைந்து நடத்திய போராட்டத்தில் தமி ழகம் உட்பட நாடு முழுவதும் 10 லட்சத் திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
ஒன்றிய பாஜக அரசின் பெருநிறு வன ஆதரவு கொள்கைகளால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயி கள் - தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, விவசா யத்தை கார்ப்பரேட் மயமாக்கி, விவசாயி களை நிலத்திலிருந்து வெளியேற்றும் வகையில் 3 வேளாண் சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தது. அதனை தங்களின் ஓராண்டுக்கும் மேலான வீரஞ்செறிந்த போராட்டம் மற்றும் அதில் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் உயிரைப் பலி கொடுத்து முறியடித்தனர்.
விவசாயிகள் விரோத மோடி அரசு அப்போதும், விவசாயிகளின் முக்கி யக் கோரிக்கைகளான வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கான தனிச்சட்டம் இயற்ற வேண்டும், எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும்; மாசுக்கட்டுப்பாட்டு சட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக் கூடாது; விவசாயிகளுக்கு ஒருமுறை கடன் தள்ளுபடி வழங்க வேண்டும்; 58 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்; 2020-2021-ஆம் ஆண்டுகளில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் எதை யும் ஏற்கவில்லை.
தொழிலாளர் உரிமை பறிப்பு
அதேபோல தொழிலாளர் வர்க்கம் பல நூற்றாண்டு காலமாகப் போராடிப் பெற்ற உரிமைகளை, தொழிலாளர் களின் வாழ்வாதாரத்திற்கு உத்தர வாதம் அளிக்கும் 44 தொழிலாளர் சட்டங் களில், 15 சட்டங்களை முழுமையான விவாதம் எதுவும் நடத்தாமலேயே ரத்து செய்த மோடி அரசு, மீதியுள்ள 29 சட்டங் களையும் 4 தொகுப்புகளாக்கி, ஆட் குறைப்பு, ஊதியம் - கூலிக் குறைப்பு, தொழிற்சங்க உரிமை மற்றும் தொழிற் சங்க அங்கீகார பறிப்பு உள்ளிட்ட நட வடிக்கைகளையும் தொடர்ந்து வரு கிறது. இதனால், வேலையின்மை, குறைந்தபட்ச ஊதியத்திற்கான உத்தரவாதமின்மை, விலைவாசி உயர்வு- இவற்றால் விவசாயிகளும் தொழிலாளர்களும் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
‘டெல்லி சலோ’ போராட்ட நாளில்..
எனவே, தங்களின் உரிமையைப் பாது காக்க - இழந்த உரிமையை மீட்க கடந்த 2020-ஆம் ஆண்டு ‘நவம்பர் 26’ அன்று, அர சியலமைப்புச் சட்ட நாளில் அகில இந்திய வேலைநிறுத்தம் மற்றும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று ‘டெல்லி சலோ’ நாளில் நாடு முழுவதும் போராட்டங் களைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதனொரு பகுதியாகவே, செவ்வா யன்றும் (2024 நவம்பர் 26) நாடு முழுவதும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாவட்டங் களில் போராட்டங்கள் நடைபெற்றன.
வீதிகளில் திரண்ட 10 லட்சம் பேர்
மத்திய தொழிற்சங்கங்களும் சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் இணைந்து அறைகூவல் விடுத்த இப்போராட்டம், எதிர்பாராத வகையில் மாபெரும் மக்கள் திரளைக் கண்டது. பத்து லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் - தொழிலாளர்கள், வீதிகளில் இறங்கி தங்கள் உரிமைக் குரலை ஒலித்தனர்.
கிராமம், நகரம் என்ற வேறுபா டின்றி, தொழிற்சாலைகள் முதல் அலு வலகங்கள் வரை, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போராட்டக் குரல்கள் எதிரொலித்தன. அத்தியாவசியப் பொருட் களின் விலைவாசி உயர்வால் வாடும் சாமானிய மக்களின் வேதனையும், வாழ்வாதார பாதுகாப்பை நாடும் தொழி லாளர்களின் ஏக்கமும், நியாய விலை கோரும் விவசாயிகளின் கோரிக்கையும் ஒன்றிணைந்த குரலாய் ஒலித்தது.
மாவட்ட ஆட்சியர்களிடம் மனு
மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பி னரும் இந்தப் போராட்டத்தில் கை கோர்த்தனர். அலுவலகங்களில் உணவு நேர ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறின. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் திரண்ட மக்கள் கூட்டம், தங்கள் கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தனர்.
குடியரசுத் தலைவரிடமும் முறையீடு
மேலும், குடியரசுத் தலைவருக்கும் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட் டது. அதில், “பாதிக்கப்படும் சாமானிய மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்; தொழிலாளர்கள், விவ சாயிகள் மற்றும் பொதுமக்களின் அடிப் படை உரிமைகளை உறுதிசெய்ய அவ சர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டு உள்ளது.