பொய் தகவல்கள்: அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
மதுரை, அக்.12- ஒரு அரசு அதிகாரி தவ றான உறுதிமொழியை தாக் கல் செய்வதை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக்கொள் ளாது என உயர்நீதிமன்ற மது ரைக் கிளை தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக பட்டா வழங்கியதை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு ஒன்றின் மீதான விசாரணை யின் போதே, நீதிபதி பி.டி.ஆஷா இவ்வாறு காட்டமாக தெரிவித்துள்ளார்.
தவறான உறுதிமொழி தாக்கல் செய்வதை நீதிமன் றம் கண்களை மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்காது. அரசு ஊழியர் விதிமீறி ஆவ ணம் திருத்துதல், நடை முறைகளை எப்படி மாற்ற லாம் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம் என்றும், தவறான தகவல் தாக்கல் செய்த நிலக் கோட்டை வட்டாட்சியர் மீது திண்டுக்கல் ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை
புதூர் அப்பு மீது குண்டர் சட்டம்
சென்னை, அக்.12- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப் பட்ட புதூர் அப்பு மீதும் குண் டர் சட்டம் போடப்பட்டு உள் ளது. நாட்டு வெடிகுண்டு விநியோகித்த விவகாரத்தில் போலீசார், ரவுடி புதூர் அப்பு வை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 28-ஆவது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத் தின் கீழ் சென்னை போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கெனவே 25 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டில் மட்டும் ரயில் விபத்தில் 351 பேர் பலி!
புதுதில்லி, அக். 12 - நரேந்திர மோடி தலைமையிலான ஒன் றிய பாஜக ஆட்சியில், நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 200 பெரும் ரயில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதும், இதில் 351 பேர் உயிரிழந்ததும் தகவல் அறி யும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகி யுள்ளது.
சமூக ஆர்வலர் விவேக் பாண்டே தக வல் அறியும் சட்டம் மூலம் எழுப்பிய கேள் விக்கு, ரயில்வே துறை அளித்துள்ள பதி லில், நாடு முழுவதும் கடந்த 2019-20 முதல் 2023-24 வரையிலான கடந்த 5 ஆண்டு களில், 200 பெரும் ரயில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்குகளில் 351 பேர் உயி ரிழந்தனர். 970 பேர் காயமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் ஏற்பட்ட 10 பெரும் விபத்துகளில் 297 பேர் உயிரிழந்தனர். 637 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 20 ரயில் விபத்து கள் நடந்துள்ளன. இவை பெரும்பாலும் உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங் களில் தான் நிகழ்ந்துள்ளன.