india

img

ஒரே நாடு ஒரே தேர்தல் - நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பு

புதுதில்லி,டிசம்பர்.20- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை 39 பேர் இடம்பெற்றுள்ள கூட்டுக்குழுவிற்கு அனுப்பும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டுக்குழுவில் 27 மக்களவை உறுப்பினர்கள், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி , மணீஷ் திவாரி, சிபிஎம் சார்பில் கே.ராதாகிருஷ்ணன், திமுக சார்பில் டி.எ..செல்வகணபதி உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.