india

img

5 மாநில தேர்தலுக்கான பேரணி, பொது கூட்டங்கள் நடத்த ஜன.31 வரை தடை நீட்டிப்பு  

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் பேரணி மற்றும் பொது கூட்டங்கள் நடத்துவதற்கான தடை நீட்டிப்பு ஜனவரி 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் வருகிற பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7 ஆம் தேதிவரை தேர்தல் நடைபெற உள்ளது.  

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து 5 மாநிலங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடையை ஜனவரி 22 ஆம் தேதிவரை தேர்தல் ஆணையம் நீட்டித்தது. அதிகபட்சமாக 300 நபர்கள் அல்லது 50 சதவீத இருக்கையுடன் உள் அரங்குகளில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.  

இந்தநிலையில் தேர்தல் ஆணையம் தெரிவித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் ஜனவரி 31 ஆம் தேதிவரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.