india

img

வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸாக உயரும்: டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை  

டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதையடுத்து நாளை முதல் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், டெல்லியின் எப்போதும் இல்லாத அளவில் தற்போது வெப்பம் அதிகளவில் பதிவாகியுள்ளது. கடந்த 2017, ஏப்ரல் 21ல் தலைநகரில் அதிகபட்சமாக 43.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. மேலும், கடந்த ஏப்ரல் 29, 1941-ல் 45.6 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலையாகப் பதிவானது.  

இந்நிலையில் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் டெல்லியின் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸை தொட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 46 டிகிரி செல்சியஸாக பதிவாக வாய்ப்புள்ளது.

இதையடுத்து ஏப்ரல் 28 முதல் தேசிய தலைநகரின் வெப்ப அலை வீசும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.