india

img

சிஏஏ, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது... தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசம்

ஹைதராபாத்:
 

குடியுரிமைத் திருத்தச் சட்டம், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; இதற்கு எதிராக அனைத்து மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தெலுங்கானா முதல் வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். இதுதொடர்பாக சந்திரசேகரராவ் மேலும் பேசியிருப்பதாவது: 

நான் கிராமத்தில் எனது வீட்டில்பிறந்தேன். அப்போது மருத்துவமனைகள் எதுவும் இல்லை. நட்சத்திரத்தை வைத்து, கிராமத்து பெரியவர் ஒரு ‘ஜாதகம்’ எழுதுவார். அவ்வளவுதான். அதற்கு அதிகாரப்பூர்வ முத்திரையெல்லாம் கிடையாது. அப்படி, 66 வயதாகும் எனக்கே, பிறப்புச் சான்றிதழ் இல்லாதபோது, எனது தந்தையின் பிறப்புச் சான்றிதழுக்கு எங்கே போவது? அதுமட்டுமல்ல, நான் பிறந்த போது,எங்களிடம் 580 ஏக்கர் நிலமும் ஒருகட்டடமும் இருந்தது. அப்படியானகுடும்பத்தில் பிறந்த என்னாலேயே, எனது பிறப்புச் சான்றிதழை முறைப்படி பெற முடியாதபோது, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் எவ்வாறு தங்கள் சான்றிதழ்களை பெற்றிருப்பார்கள்.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங் கள் மிகவும் எரிச்சலூட்டும் வகையில் உள்ளன. சிஏஏ போன்ற சட்டத்தால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்து வருகிறது. சாதி, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்துவதை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது. ஆனால், புதிய குடியுரிமைச் சட்டம் நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராகஉள்ளது.தெலுங்கானா சட்டப்பேரவையில் விரைவில் இந்த சட்டங்களுக்கு எதிராக
தீர்மானம் நிறைவேற்றப்படும். அனைத்து மாநிலங்களும் சிஏஏ-வுக்கு எதிராகதீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.