india

img

தேர்தல் நன்கொடையாக ரூ.6,088 கோடி பெற்ற பாஜக!

2024-25-இல் பாஜக தேர்தல் நன்கொடையாக ரூ.6,088 கோடி  பெற்றுள்ளது.
தேர்தல் பத்திர நடைமுறையை உச்ச நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரத்து செய்தது. இதை அடுத்து, 2024-25-இல் பாஜக ரூ.6,088 கோடி தேர்தல் நன்கொடை பெற்றுள்ளது. இது கடந்த 2023-24 ஆண்டு பாஜக வசூலித்த நன்கொடையை விட 53% அதிகமாகும். இது தொடர்பான நிதி அறிக்கையை கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் பாஜக சமர்ப்பித்துள்ளது. 
அந்த அறிக்கையின் படி, தேர்தல் அறக்கட்டளை மூலம் ரூ.3,744 கோடியும், தனிப்பட்ட நபர்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து ரு.2,344 கோடியும் பாஜக நன்கொடையாக பெற்றுள்ளது. இதில் ப்ரூடெண்ட் தேர்தல் அறக்கட்டளை (Prudent Electoral Trust) மூலம் ரூ.2189.7 கோடியும், ப்ரோக்ரசீவ் தேர்தல் அறக்கட்டளை (Progressive electoral trust) மூலம் ரூ.757.6 கோடியும், ஏபி பொது தேர்தல் அறக்கட்டளை மூலம் ரூ.606 கோடியும், நியூ டிமாக்ரடிக் தேர்தல் அறக்கட்டளை மூலம் ரூ.150 கோடியும் நன்கொடை பெறப்பட்டுள்ளது. இது தவிர, சீரம் நிறுவனம் ரூ.100 கோடியும், ரங்டா நிறுவனம் ரூ.95 கோடியும், பஜாஜ் நிறுவனம் ரூ.74 கோடியும், ஐடிசி குழுமம் ரூ.72.5 கோடியும், ஹீரோ நிறுவனம் ரூ.70 கோடியும், வேதாந்தா நிறுவனம் ரூ.65 கோடியும் தேர்தல் நன்கொடை பாஜகவால் பெறப்பட்டுள்ளது.
தேர்தல் அறக்கட்டளைகள், கார்ப்பரேட் மற்றும் தனிநபர்களிடம் இருந்து பெறப்படும் நிதியில் 95%-ஐ அந்த நிதியாண்டிலேயே கட்சிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்தியாவில் மொத்தம் 19 தேர்தல் அறக்கட்டளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.